Tuesday, May 09, 2006

புனித செயஸ்தியார் அரங்கு:

இரு நூற்றாண்டுகளுக்கு முன் சில்லாலையில், ஒரு புனித செபஸ்தியார் ஆலயம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த ஆலயத்தை ஆரம்பித்து பரிபாலித்து வந்த மக்கள் தங்கள் தொழில் வாய்ப்பின் காரணமாக, கிராமத்தை விட்டு வெளியேறினார். அதனால் அந்த ஆலயம் பரிபாலிப்பு அற்றுப் போய்விட்டது. அந்த ஆலயத்தில் இருந்த புனித செபஸ்தியார் சுரூபத்தை, கதிரைமாதா ஆலயத்துக்கு எடுத்து வந்து, அவ் ஆலயத்தில் நடந்ததுபோல் ஒன்பது நவ நாட்கள் அநுஷ்டித்து, தை மாசம் 20ம் திகதி திருச்சுரூபபவனி கிராமியப்பாடல்களுடன் நடைபெறும். கிராமத்தில் ஏற்பட்ட கொள்ளைநோய் காலத்தில் சுரூபத்தை வீதி தோறும் பவனி கொண்டு வழிபாடு நடத்தி, அதன் பலனை அடைந்தார்கள். இவ் ஆலயம் இருந்த வேப்பமரத்தின் இலைகளை, நோயின் அநுமானமாக பாவித்து, அதன் பலன்களை அடைந்தார்கள். இத்தகவல்களை அறிந்த அன்னாள் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் குலாஸ் அடிகளார், அந்த ஆலயத்துக்கு சமீபமாக ஒரு சிறிய சதுக்கத்தை, 1977ம் ஆண்டு மார்கழி மாதம் பதினோராம் திகதி, அப்பகுதிவாசிகளின் அனுசரணையுடன் அமைத்து, புனித செபஸ்தியார் சுரூபத்தை ஸ்தாபித்து வைத்தார். இவ்விடம் காலாதிகாலமாக, புனித செபஸ்தியார் வீதி என அழைக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும், புனித செபஸ்தியார் திருநாள் அன்று, இவ்வரங்கில் விசேட வழிபாடுகளை, ஆலயத்தின் பங்குக்குருக்கள் நடாத்தி வைப்பார்கள். இதனைத் தொடர்ந்து விசேட கலைநிகள்வுகளும், இடம்பெறுவது வழக்கம்.

0 Comments:

Post a Comment

<< Home