Tuesday, May 09, 2006

வண. லூயிஸ் டேசியும், சில்லாலையின் கிறிஸ்தவப் பணியும்:

முத்திப் பேறுபெற்ற யோசவாஸ் முனீந்திரன், சில்லாலையின் முதலாவது பங்குத்தந்தையென்பதை நாமெல்லோரும் ஏற்றுக் கொண்டோம். அதன் பின் வந்த பங்குத்தந்தைகளில், வணக்கத்துக்குரிய லூயிஸ் டேசி அடிகளார் தனது குருத்துவப் பணியில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் இரு பருவகால குருத்துவப்பணியை 15 ஆண்டுகள் செய்து முடித்தார். இவர் தனது முதலாவது பருவகாலத்தில், இக்கிராமத்தில் பெண்பிள்ளைகளுக்கு ஓர் பாடசாலையும், ஆண்களுக்கு ஓர் பாடசாலையும், அமைத்துக் கொடுத்தார். சில்லாலை தெற்கில், புனித யாகப்பர் ஆலயமென்றை அமைத்தார். இரண்டாவது பருவகாலத்தில் இலங்கையின் பிரமாண்டமான, அழகுவாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கதிரைமாதா ஆலயத்தை அமைத்தார். அவர் குருவாகவும், கைத்தேர்ந்த தொழில்நுட்பவியலாளராகவும், இருந்ததினால் அவ் ஆலயம் வலுப்பெற வாய்ப்பாக இருந்தது.
நமது கிராமம் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்ததினால் பல கணிசமான வேலைகளை ஊர்மக்களின் சிரமதானப்பணி மூலம் செய்து முடித்தார். 1957ம் ஆண்டு புதிய ஆலயத்தில் முதற் திவ்விய திருப்பலியை அவர் நிறைவேற்றிவைத்தார். புதிய ஆலயத்தை ஆரம்பித்து பிரசங்க மேடைக்கு வந்த பொழுது, அவருடைய பிரசங்கத்தைக் கேட்க எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். முதல் இறைவனுக்கு நன்றி தெரிவித்தபின், தனக்கு உறிதுணையாக இருந்த, யோன்பிள்ளை உப தேசியருக்கும் நன்றி தெரிவித்தார். பின் பாடசாலைப் பிள்ளைகளாய் இருந்த, சிறுவர்கள் செய்து கொண்ட பங்களிப்பைப் பாராட்டி, இந்த கட்டிட வேலையில் சிமெந்து, மணல்,, தண்ணீர், மட்டுமல்ல இளம் சிறார்களின் வேர்வையும் கலந்துள்ளதென கூறினார்.

0 Comments:

Post a Comment

<< Home