யோசேவ்வாஸ் முனிவரின் சிலுவை:
வேத விதிகளை அனுசரியாத, காயர் பிறஞ்சிப்பிள்ளை, ஞாயிறு தினங்களில் திருப்பலியை அலட்சியம் செய்து, வேலை செய்துவந்தார். ஒரு ஞாயிறன்று வழமைபோல் திருப்பலிக்கு செல்லாது வீடு வேய்ந்தார். இதையறிந்த யோசவ்வாஸ் வீடு வேய்வதை விட்டுப் திருப்பலிக்கு வருமாறு கூறியனுப்பினார். காயர் செவிசாய்க்கவில்லை. அதையறிந்த முனிவர் "காயர் வீடு தீப்பற்றி எரியட்டும்" என்றார், ஆவ்வாறே வீடும் எரிந்தது. முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினார், காயர். முனிவர் தன் சிலுவையைக் கழற்றி "இச் சிலுவை உன்னிடம் உள்ளவரையும் குறையா சோறும், புத்ரிர பாக்கியமும் உண்டு" என ஆசீர்வதித்தார். இச் சிலுவை தலைமுறை, தலைமுறையாக காயர் இனத்தவரிடம் உள்ளது. தற்போது இச்சிலுவையானது மடுத்திருப்பதியில் கடமைபுரியும் திரு. A. J. மரிய நாயகம் அவர்களினது காப்பில் உள்ளது. இவர் இதனை உயிர்போலக் காத்து வருகிறார். இதனுள் இருப்பதை அறிய, இச் சிலுவையை உடைத்துப் பார்த்த குரவர் ஒருவர், குருடானதாக கர்ண பரம்பரைக் கதையுண்டு. இச் சிலுவையைப்பற்றி ஆராச்சி நடத்த வந்த பாப்பரசரின் பிரதிநிதிகள் றோமைக்கு எடுத்துச் செல்வதற்கு, இதனைத் தருமாறு கேட்டனர், அதற்கு சிலுவையின் உடைமையாளர் மறுத்துவிட்டார்.


0 Comments:
Post a Comment
<< Home