Tuesday, May 09, 2006

யோசவாஸ் முனிவரும், சில்லாயும்:

ஒல்லாந்தரின் வேதகலாபனைக் காலத்தில், சில்லாலையில் வேர் ஊன்றிய திருச்சபையினர், சுயாதீனமாகத் தங்கள் வழிபாடுகளைக் குருக்களின்றிக் கடைப்பிடித்து வந்தனர். இவ்வேளையில் 1687ல், வணக்கத்துக்குரிய யோசவாஸ் அடிகள் மாறுவேடத்தில் கத்தோலிக்க சேவை புரிய, யாழ் நகர் வந்தார். வயிற்றோட்ட நோயால் பீடிக்கப்பட்ட இவர், பாதுகாப்பு இடமெனக் கருதப்பட்ட சில்லாலையில், ஒரு குடிசையில் தங்கி வாழ்ந்தார்.
இவரின் உண்மை உருவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட, மரியன்னையின் பத்தி விசுவாசமுள்ள, மூதாட்டி ஒருவரினால் காப்பாற்றப்பட்டார். தன் நோயிலிருந்து விடுபட்டது மரியன்னையின் அருளினால் தான், என்று கண்ட அடிகளார் "ஆரோக்கியமாதா", "மருந்துமாதா" என்று மரியன்னையை அழைத்தார். குடிசைக் கோவிலாக இருந்த அன்றைய ஆலயத்தில், அவர் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றி வந்தார் என்பது வரலாறு கூறும் உண்மை.
1882ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆலயம், தற்போதைய கத்தோலிக்க மக்களின் அதிகரிப்புக்கும், ஆராதனைகளில் பக்திபூர்வமாக மக்கள் பங்குபற்றுவதிலும் இருந்த வசதிக் குறைவுகளைக் கருத்திற் கொண்டு, யாழ் ஆயர் அதிவணக்கத்திற்குரிய எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் அனுசரணையுடன், வணக்கத்துக்குரிய பிதா லூயிஸ் டெஸசி அடிகளாரின் விடாமுயற்சியால், இலங்கையில் உள்ள அழகு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான, புதிய ஆலயத்தினை, 1960ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இவ்வாலயத்தின்நவீன கோபுரம் ஒன்று, வணக்கத்துக்குரிய பிதா பிரான்சிஸ் குலாஸ் அடிகளால் திட்டமிடப்பட்டு, வணக்கத்துக்குரிய பிதா இராசரட்ணம் அடிகளால் கட்டிமுடிக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் எமது கிராமத்தின் முதல் பங்குத்தந்தையாக, அண்மையில் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட புனித யோசவாஸ் முனிவர் திகழ்கிறார். சில்லாலை கிராமத்திலிருந்து தற்போது மலேசிய ஆயராக இருக்கும் பேரருட்திரு. அன்ரன் செல்வநாயகம் ஆண்டகை உட்பட 34 குரவர்களும், 37க்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகளும், அதிகப்படியான மறையாசிரியர்களும், கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்துள்ளனர். இதையிட்டு சில்லாலைக் கிராமம் பெருவகையும், இறையேசுவின் பேரருளையும் பெறுகிறது.
உலகின் பல பாகங்களிதும் பரந்து வாழும் சில்லையூர் மக்கள் ஆங்காங்கே கதிரைச் செல்வியின், இப் பெருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் கணிசமான முக்கியத்தை கொடுக்கிறது. எமது நாட்டிலுள்ள தமிழ், ஆங்கில ஏடுகளிலும், முன்னுரிமை அளிக்க தவறுவதில்லை. கொழும்பிலும், பிறநகர்பகுதிகளிலும் வாழும் பக்தர்கள், சில்லாலைக் கதரைமாதா ஆலயவிழாவில், பங்கு பற்ற முடியாதநிலையில் இருப்பவர்கள், கொழும்பு மாநகரில் உள்ள இலக்கம் 33 கிளிபேட் பிளேஸ், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள யேசுசபைக் சிற்றாலயத்தில், இவ்விழாவை கொண்டாடுகின்றார்கள். பல குருமார் இணைந்து, இங்கு கூட்டுத் திருப்பலியும், திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம்பெறும்.
ஆசாரத்துக்குரிய முத்திப்பேறுபெற்ற யோசவாஸ் முனிவர் கிறிஸ்துவின் நற்செய்தியை இலங்கையில் போதிக்கவந்த காலத்தில், திருச்சபைக்கு மாறாக, ஒல்லாந்து அரசியல் வாதிகளால், ஏற்பட்ட கஸ்ரங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு, ஆதி கிறிஸ்தவர்கள் பலமான வேத விசுவாசத்தில் ஊன்றிய மக்கள் மத்தியில் தஞ்சமடைந்து கொண்டார். அவர்களிடம் தஞ்சமடைந்தபின் ஒல்லாந்தரின் நெருக்கடியில் இருந்து குரவரை பாதுகாப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கண்காணிப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சில்லாலை கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை பாராட்டி, கொழும்பு மறைமாவட்ட பேராயர் நிக்கலஸ் மாக்கஸ் பெர்ணாண்டோ, ஆசாரத்துக்குரிய யோசவ்வாஸ் முனிவர், யாழ் மறைமாவட்ட ஆயர் வ. தியோகுப்பிள்ளை, திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியன்னி பெர்னான்டோ "இலங்கை கத்தோலிக்க ஆயர் மண்றத்தலைவர்", சிலாபம் மறைமாவட்ட ஆயர் F. மாக்கஸ் பெணாண்டோ, முன்னாள் சிலாபம் மறைமாவட்ட ஆயர் எட்மன்ட் பீரிஸ், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னாள் ஆயர் L. R. அன்ரனி, இளவாலை மறைவட்டார முதல்வர் அருட்தந்தை அன்ரன் T. இராரஐநாயகம், யாழ் மறைமாவட்ட குழுத்தலைவர் எஸ். ஹிலறி ஜெபநேசன். பங்குத்தந்தை ப. இருதயதாஸ் ஆகியோர் தங்கள் உள்ளக் கருத்துக்களை பகிரங்கமாக அறிக்கையிட்டு, ஆதிக் கத்தோலிக்க குருக்கள் வழங்கிய சின்னறோம் எனும் நாமத்தை உறுதிப்படுத்தினார்கள்.

0 Comments:

Post a Comment

<< Home