Sillalai Association Anthem
சில்லாலை சமூக கலாச்சார கனடாச் சங்க கீதம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
வளரும் ஈழத் தாயகம்
சூழ் புகழ் சில்லாலையூர்
தூய யேசு அமைதியின்
சுடரொளியில் வாழ்க வாழ்கவே!
புனித கதிரை அன்னையின்
புகழ் ஒளிசேர் காவலில்
இனிய சின்ன றோமையாம்
எங்கள் ஊரே வாழ்கவே
திகழ் புனிதர் யோசேவாஸ்
திருவடிகள் தோய்ந்ததால்
அகில சோதி யேசுவின்
அருமறையூர் வாழ்க வாழ்கவே!
பாரின் நான்கு திசைகளும்
பரந்து வாழும் நம்மவர்
சீரில் உயர்ந்து தமிழினச்
சின்னம் தாங்கி வாழ்கவே!
வேரின் மகிமை நன்மணம்
வையம் எங்கும் பரப்புவோம்
நேரில் அன்பு ஒற்றுமையை
நெஞ்சில் போற்றி வாழுவோம் வாழுவோம்!
வாழ்க வாழ்க வாழ்கவே!


0 Comments:
Post a Comment
<< Home